Skip to main content

Shaala Siddhi* எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.

Shaala Siddhi* எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.
வரும்  31 ஆம் தேதிக்குள் *Shaala Siddhi* பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.
அதற்காக 
தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.

1. *Students Profiles*
இந்த பகுதில் நாம் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC,  ST,  OBC, General,  Minority,  Total.
இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .

2. *Classwise Annual attendance rate*
இந்த பகுதியில் 2017-2018 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .
இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .

3. *Learning outcomes Annual report* பகுதி.
இங்கு 2017-2018 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .

4. *Teachers Profiles*
 இதில் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.

5. *Teachers Attendance*
இந்த பகுதியில் 2017-2018 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் . CL தவிர பிற விடுப்புகள் .



Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்