Skip to main content

சிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை!

அபூர்வ மூலிகையை கொண்டு சிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை!"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நம் முன்னோர்கள் சொல்லி சென்று விட்டனர். நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் அப்படி வை
த்துக்கொள்ளாவிட்டால் நமது உடல் நோய்களின் உடல் ஆகிவிடும்.


வாழ்க்கையில் எத்தனையோ நோய் நொடிகளை பார்த்துள்ளோம். சில நோய்கள் நாட்கள் செல்ல செல்ல தீவிரமடைந்து உயிரையே பறிக்கிறது. இன்னும் சில நோய்கள் அந்ததந்த கால கட்டத்தில் நம்மை விடாமல் துரத்தி அதிகமாக துன்புறுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் சிறுநீரக கல். இக்கல் எப்படி வருகிறது மற்றும் எளிய முறையில் எப்படி கரைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

சிறுநீரக கல் எப்படி உருவாகிறது

வேர்வையினாலும், சாப்பிடக்கூடிய உணவு மூலமாகவும் தங்கிய உப்பு, கல்லீரலிலும், சிறுநீரகத்திலும் தங்கிவிடுவதால் கல் அடைப்பு ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தில் சிறிய கல் தங்கினால் சிறுநீர் கழிக்கும் பொது மிகவும் எரிச்சலாக இருக்கும். சிறுநீர் வெளியே வரும் போது உயிரே போகும் படி இருக்கும். சிறிய கல்லிற்கே இப்படி என்றால் பெரிய கல் என்றால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. சில சமயங்களில் கல் பெரிதாக இருந்தால் அறுவைசிகிச்சை வரை எடுத்து சென்று விடும். அந்த அளவிற்கு இந்நோய் நம்மை ஆட்டிப்படைக்கும். சிறுநீரக கல்லை அபூர்வ மூலிகையான இரணகள்ளி இலையை கொண்டு கரைக்கலாம்.


கல்லை கரைக்க இரணகள்ளியை எப்படி பயன்படுத்த வேண்டும்

காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு இரணகள்ளி இலையை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அதாவது தினமும் காலை ஒரு இலையை உண்ணவேண்டும். இந்த இலை புளிப்பு சுவை கொண்டது. முதல் நாள் ஒரு கொழுந்து இலையை உண்ண வேண்டும். பின்பு அடுத்த நாள் அதை விட பெரிய இலையாக உண்ண வேண்டும். அதற்கு அடுத்த நாள் சென்ற இலையைவிட பெரியதாக உண்ண வேண்டும். இப்படியே படிப்படியாக பெரிதாக இருக்கும் இலையை உண்ண வேண்டும். ஒரு வாரம் இந்த இலையை உண்ண வேண்டும். உண்ட பிறகு, கண்டிப்பாக ஒருமணி நேரத்திற்கு தண்ணீர் தவிர எதையும் பருகவோ உண்ணவோ கூடாது. இதை செய்தால் எப்பேர் பட்ட கல்லும் எளிதாக கரைந்து விடும். இதை உண்பதால் எந்த பக்கவிளைவுகளும் வராது முற்றிலும் இயற்கை மருத்துவமே.

இரணகள்ளியின் இதர பயன்கள்

இந்த இலையை உண்டால் உடம்பில் உள்ள சர்க்கரையை குறைக்கும். பெண்கள் காலை மாலை இரண்டு வேலை இந்த இலையை சாப்பிட்டு வந்தால் கர்பப்பை சம்பந்த பட்ட சிக்கல்கள் நீங்கும். இந்த இலையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சுத்தமாகும். அதோடு மட்டும் இல்லாமல் சிறுநீரகம் மிகவும் வலிமை அடையும்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி