Skip to main content

எதனால் நீர்க்கட்டி உருவாகிறது? அதனை தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்படும் இந்த நீர்க்கட்டிகளை சில அறிகுறிகளை கொண்டு கண்டுபிடிக்க முடியும். இவை ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில் சிறு பருக்கள், எரிச்சல்
தன்மை உண்டாவதும் நீர்கட்டிக்கான ஒரு அறிகுறியாகும்.திடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மை உண்டாகலாம். அதற்கும் நீர்கட்டி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீண்ட இடைவெளிக்கு பின் வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலி ஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

குறைபாடுள்ள சினைப்பை, கனைய சுரப்பு நீரின் அதிகரிப்பு இவற்றால் ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

ஒரு நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிகப்பட்சமான முடி உதிர்ந்தால் இது நீர்க்கட்டிக்கான மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.

தீர்வுகள்:

காளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் இதை கட்டாயாம் சாப்பிடுவது அவசியம்.

சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.

பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.நறுமணமிக்க உணவுப் பொருளான பட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. கலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையை யும் பெண்கள் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு