Skip to main content

'ரோடு டூ ஸ்கூல்' திட்டத்தில், 102 அரசு பள்ளிகள் தத்தெடுப்பு!!

ஓசூர்: சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு பள்ளிகளை தத்தெடுத்த தனியார் நிறுவன நிர்வாகம், ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில்
, அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது.இந்நிறுவனம், 'ரோடு டூ ஸ்கூல்' என்ற திட்டத்தில், 2015 - 16, 2016 - 17ல், கல்வியில் மிகவும் பின்தங்கிய, 72 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்து எடுத்தது.


அத்துடன், 80 ஆசிரியர் - ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு, மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை விரிவுபடுத்தும் வகையில், நடப்பாண்டில் சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, அசோக் லேலண்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாத சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அரசு அனுமதியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அந்நிறுவன அதிகாரி பாலசந்தர், நேற்று வழங்கினார்.தத்தெடுக்கப்பட்ட, 102 அரசு பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் செய்யப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்