Skip to main content

மோமோ: பெற்றோருக்கு மத்திய அரசு அறிவுரை!

சமூக வலைதளங்களில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து சுற்றிவரும் மோமோ விளையாட்டு குறித்து மின்னணு மற்றும்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

ப்ளூவேல் போன்று மோமோ விளையாட்டும் உயிர்களைக் காவு வாங்கும் விளையாட்டாக உள்ளது. வெளிநாடுகளில் தொடங்கிய இந்த விளையாட்டு விபரீதம், தற்போது இந்தியாவுக்குள்ளும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய விளையாட்டு, தற்போது வாட்ஸ் அப்பிலும் பிரபலமாகிவிட்டது. வாட்ஸ் அப் புரோபைலில், ஜப்பான் மோமோ பொம்மை படம் போல இருக்கும். கொடூரமான படங்கள், வீடியோக்களை அனுப்பி, இந்த மோமோ குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


தனிப்பட்ட மற்றும் அந்தரங்கத் தகவல்களை திருடுவதுதான் இதனுடைய முக்கிய குறிக்கோள். ப்ளூவேல் போன்று இந்த விளையாட்டுக்கும் இளைஞர்கள் பலியாவதைத் தடுக்க பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம். அதனால், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. “குழந்தைகள் சமூக வலைதளங்களில் இருக்கும்போது, அவற்றைப் பெற்றோர் கவனிக்க வேண்டும். இதுகுறித்து குழந்தைகளிடம் பேசுவதை பெருமளவில் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் உளவியல் ரீதியாக எப்படி இருக்கின்றனர். அவர்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? திடீரென்று அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனரா? அருகில் செல்லும்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போனில் இருக்கும் ஸ்கீரினை மாற்றுகிறார்களா? குறிப்பாக, சமூக வலைதளப் பயன்பாட்டுக்குப் பிறகு அதிகமாகக் கோபப்படுகிறார்களா உள்ளிட்டவற்றைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

இந்த விபரீதத்தைத் தடுக்க, பெற்றோர்கள் good cyber/mobile parenting software என்ற சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் ஏதாவது சந்தேகத்துக்குரிய நடவடிக்கை காணப்பட்டால் உடனடியாக கவுன்சலிங் கொடுக்க வேண்டும். பெற்றோர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்


இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருப்பார்கள். வருத்தம் நிறைந்தவர்களாகவும், மகிழ்ச்சியற்றும் காணப்படுவார்கள்.

தினந்தோறும் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் கவலையுடன் இருப்பார்கள்.

மற்றவர்கள் மீது திடீரென்று கோபப்படுதல், அடிக்கடி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாமை, உடலில் ஆங்காங்கே காயம் ஏற்படுதல் போன்றவற்றைக் கண்டால் விழிப்புணர்வுடன் குழந்தைகளை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு