Skip to main content

Youtube #hastag - விரைவில் வருகிறது

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இதில் வாட்ஸ்அப் என்பது தொலைபேசி நண்பர்களுடன் கலந்துரையாடும் தளமாக உள்ளது.
ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் நாம் ஒரு பதிவை வெளியிடும் போது, அதனை எளிதில் நெட்டிசன்கள் பார்க்கும் வகையில் # என்ற குறியீட்டுடன் பதிவிடுகிறோம்.
இந்த # என்பது ஃபேஸ்புக்கை விட, ட்விட்டரில் பிரபலம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் ட்விட்டரில் அதிக முறை பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும். இதனால் ஏதேனும் ஒரு செய்தி அன்றைய தினத்தில் வைரலானால், அதை # மூலம் நெட்டிசன்கள் பரப்பி ட்ரெண்டிங்காக செய்வனர். இதேபோன்று யுடியூப்பிலும் நாம் # பயன்படுத்தி வீடியோ பதிவை வெளியிட முடியும். ஆனால் இது அனைத்து தரப்பு வீடியோக்களை காண்பிக்கும்.
இந்நிலையில் யுடியூப் நிறுவனமே அதிகாரப்பூர்வாக ஹபர்லிங்க் வசதியுடன் கூடிய ஹேஷ்டேக்குகளை கொண்டுவருகிறது. 

ஒரு வீடியோவில் 15 ஹேஷ்டேக்குகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தேடும், ஒரு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மட்டுமே திரையில் வரும். உதாரணத்திற்கு ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக் போல. இதில் ஆபாச, பாலியல் தொடர்பான, அவதூறு ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாது. இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களின் உபயோகத்திற்கும் வரும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்