Skip to main content

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் படிப்புகள்:


பி.எஸ்.சி., அக்ரிகல்ச்சர் (இளம் அறிவியல் வேளாண் பட்டப்படிப்பு) - வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை, மதுரை, கிள்ளிகுளம் மற்றும் திருச்சி.

பி.எஸ்.சி., ஹார்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) - தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்.
பி.எஸ்.சி., பாரஸ்ட்ரி (வனவியல்) - வனவியல் கல்லூரி மற்ற்உம் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை.
பி.எஸ்.சி., ஹோம் சயின்ஸ் (மனையியல்) - மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
பி.டெக்., அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் (வேளாண் பொறியியல்) - வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்.
பி.டெக்., பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்ச்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.எஸ்., அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட் (உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில் மேலாண்மை)- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.
பி.டெக்., ஹார்ட்டிகல்ச்சர் (தொழில்நுட்ப தோட்டக்கலை) தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.
பி.டெக்., புட் பிராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி மற்றும் என்விரான்மென்டல் இன்ஜினியரிங் (உணவு பதனிடுதல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்) - வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.


4 ஆண்டுகள் / 8 செமஸ்டர்கள் கல்வித்திட்டத்தில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் நோவா ஸ்காசியா வேளாண்மை கல்லூரி ஆகியவற்றுடனான டியூயல் டிகிரி திட்டமும் உண்டு.

பொதுத் தகுதி: இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில் கணிதம், தாவரவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், நுண்ணுயிரியல், உயிரி வேதியியல், மனையியல், செவிலியல், ஊட்டச்சத்து அறிவியல் ஆகியவற்றிள் ஏதேனும் ஒரு விருப்பப்பாடம் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை முதல்வர், கோவை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மதுரை, கிள்ளிக்குளம், திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், குமுளூர் ஆகிய இடங்களிலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள காரைக்கால் (புதுச்சேரி) மற்றும் கலவை (வேலூர்) வேளாண் கல்லூரிகளிலும், நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், சென்னை ஆகிய முகவரிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

சேர்க்கை விவரங்களுக்கு:
முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் மாணவர் சேர்க்கை, 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641 003.
போன் : 0422 6611210, 328, 322.
பேக்ஸ் : 0244 6611410
இ-மெயில் : ugadmissions@tnau.ac.in 

வெப்சைட்  : www.tanu.ac.in
                         www.tnau.ac.in/admission.html

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்