Skip to main content

‘நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென் னையிலும், காரைக்குடியிலும் தேர்வு நடக்கும். கணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது. எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு, தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்கு அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்