Skip to main content

ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

மத்திய ரயில்வே துறையில் ௧௮ ஆயிரத்து ௨௫௨ காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் விபரம் :


ரயில்வேயில் கமர்ஷியல் அப்ரண்டிஸ்- 703, டிராபிக் அப்ரண்டிஸ்- 1645, என்கொயரி மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்- 127, கூட்ஸ் கார்டு- 7561, ஜுனியர் அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 1205, சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 869, உதவி ஸ்டேஷன் மாஸ்டர்- 5942, டிராபிக் அசிஸ்டன்ட்- 166, சீனியர் டைம்கீப்பர் 4.


இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை ரயில்வேயில்-986, திருவனந்தபுரத்தில்- 488 பணியிடங்கள் அடங்கும்.
தேர்வில் 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் வகையில் கேட்கப்படும். பொது அறிவு, ரீசனிங், நுண்ணறிவு, கணிதத்துறை வினாக்கள் இடம்பெறும். தேர்வு90நிமிடங்கள் நடக்கும்.தவறான விடைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் கழிக்கப்படும். ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். தமிழகத்தில் 17 மையங்களில் தேர்வு நடக்கும். ஒருவர் 5 மையங்களை தேர்வு செய்யலாம்.

தேர்விற்கு 'ஆன் லைன்' மூலமே விண்ணப்பிக்க முடியும். கட்டணம் ரூ.100. சில பிரிவினருக்கு கட்டணச் சலுகை உண்டு. ஜன., 25 க்குள் www.rrbchennai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்