Skip to main content

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை -ஊதிய வழக்கு -உச்ச நீதிமன்றம்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை -ஊதிய வழக்கு -உச்ச நீதிமன்றம் -அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக -நீதிபதி .-அருண் மிஸ்ரா -ஆணை.
தமிழ் நாட்டில் 6 வதுஊதிய குழு ஊதியம் 1.-6-2009 முதல் நடைமுறைபடுத்த பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த ஊதியம்ரூ.8370/- ஆகும்.  ஆனால் 6 வது ஊதிய குழு 5200 + 2800 = 8000 என நிர்ண
யம் செய்ததது. அதாவது பெற்று வந்ததை விட குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்த பிரச்சணையை போக்க தற்காலிக தீர்வாக பழைய ஊதியம் 4500ஐ 1.86 ஆல் பெருக்கி 11170 என நிர்ணயம் 31.5.2009 க்கு முன்னர் பணிநியமனம்
பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 6 வது ஊதியகுழுவில் 9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்யப்பட்டது

6 வது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய பிரச்சனையை தீர்க்க 2009 அக்டோபரில் திரு.ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் ஒரு நபர்குழு அமைக்கப்பட்டது, இந்த குழு இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறத்தில் பணி செய்கிறார்கள்,  எண்ணிக்கை அதிகமாக உள்ளார்கள் (116129 பேர்) நிதி 630 கோடி வேண்டும் என்பதால் ஊதிய உயர்வு வழங்க முடியாது என காரணம் கூறி மறுத்து விட்டது .

2012ல் நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஸ்ணன் அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது, இந்த 3 நபர் குழு தனது 
அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதி S.S.L.C. யுடன்
ஆசிரியர் பயிற்சி சான்று மட்டுமே, மத்திய அரசு ஆசிரியர் +2 வுடன் 
2வருட டிப்பமோ பயிற்சி முடித்து உள்ளார்கள். மத்திய அரசுஆசிரியர்கள் 
இந்தி, ஆங்கிலம் கற்பிக்கிறார்கள், அவர்களுக்கு கணினிஅறிவு உள்ளது
பணி நியமனம் தேசிய அளவில் ஆனது. இந்த தகுதிகள் தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இல்லை, பணி நியமனம் ஒன்றிய அளவில் ஆனது, மத்திய  அரசில் 1017 ஆசிரியர்கள் மட்டுமே., தமிழ் நாட்டில் 1,16,129 பேர் உள்ளார்கள். என இரண்டு ஊதிய குழு அறிக்கையும் பொய் காரணங்களை கூரி 20 ஆண்டுகள் +2 வுடன், டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படியில் பெற்று வந்த ஊதிய உரிமையை மறுத்து உள்ளது. தமிழ் நாட்டிலும் மத்திய அரசிலும்  1986 தேசிய கல்விபடி தான் கல்வி தகுதி பின்பற்றப்படுகிறது. ஊதியமும்  அதன் அடிப்படையில் 1988 ல் நிதிபதி ராமானுஜம் அவர்களின் 5 ம் ஊதிய குழு  அறிக்கை படி பெற்று வந்த ஊதியஉரிமையை 6 வது பறித்து உள்ளது, எனவே 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். 1988 ம் ஆண்டின் அறிக்கை படி தகுதி திறமை பணிதன்மை அனைத்தும் தற்போது உயர்ந்து  உள்ளது குறைய வில்லை. உண்மை நிலையை அடிப்படையாக கொண்டு தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.1.2006 முதல் ஊதியம் 9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்ய வேண்டும் என 16.9.2013 ல் நிதிதுறை செயலாளர் அவர்களுக்கு மனு கொடுத்தோம், அதன்மீது எந்த நடவடிக்கையும்  அரசு எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 33399/2013 தாக்கல்  சங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2014  அக்டோபரில் 8 வார காலத்தில் உண்மைநிலை அடிப்படையில் ஊதியம் மாற்றம் குறித்து அரசு அறிவிக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014 ன் ஊதிய மாற்றம் செய்திட முடியாது என தவறான ஊதிய குழு அறிக்கையில் உள்ளதையே திரும்பவும் கூரியது. நாங்கள் கொடுத்த மனுவை பரிசிலனை செய்யவில்லை. ஆதாரங்களை திருப்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே 27.2.2014 அன்று சென்னை உச்ச நீதிமன்றத்தால் வேறு ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 6 வது ஊதிய குழு அறிக்கை தவறானது என்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றத்தால் ரத்து  செய்யப்பட்ட அறிக்கையில் உள்ளதை மீண்டும் எங்கள் ஊதிய வழக்குக்கு பதிலாய் தந்தது தமிழக அரசு.

தமிழக அரசின் நிதி துறை கடிதம் 60473/2014 ஐ ரத்து செய்து உண்மை நிலை
மற்றும் நீதிபதி ராமானுசம் அறிக்கை படி மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசில் பிற துறையில் உள்ள டிப்பமோ  கல்வித்தகுதி 
உடையவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட உயர் நீதிமன்ற தீர்ப்புபடி ஓய்வு பெற்ற உயர்  நீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 வது ஊதிய குழுமுரண்பாட்டை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும். அந்த ஆணையம் உண்மை நிலையை  அடிப்படையாய் கொண்டு இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்திட வேண்டும் என மீண்டும் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தமிழக அரசு ஊதிய பிரச்சனையில் முடிவு எடுக்க நீதிபதி தலைமையில்ஆணையம் அமைக்க முடியாது, மேலும் உச்ச நீதிமன்றம் தடைஆணை வழங்கி உள்ளது, என கடிதம் அனுப்பியது. 

தமிழக அரசின் 6 வது ஊதிய குழு அறிக்கை ரத்து செய்யப்படவேண்டும். ஊதியம் 1.1.2006 முதல் 9300+4200 என மாற்றம் செய்யப்பட வேண்டும் 31.5.2009 க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 11170 ஊதியம் எனவும் 1.6.2009 பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8000 ஊதியம் எனவும் உள்ளதை மாற்றி 1.1.2006 முதல் இடைநிலைஆசிரியருக்கு ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில்
சங்கம் சார்பாக 09.09.2015 ல்
SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) No. 9109 OF 2015 ல் I.A.NO.5/2015 தாக்கல்செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை 09.12.2015 அன்றுஉச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது எனவும் இந்த வழக்கு ஏற்கனவே 6 வது ஊதிய குழு பிரச்சனை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குடன் சேர்த்து விசாரணை செய்யப்படும் என ஆணை வழங்கி உள்ளார்கள். இந்தசெய்தியை தாங்கள் வெளியிடுமாறு வேண்டுகிறேன். --கிப்சன் 


Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்