Skip to main content

புளூ பிரின்ட்' எப்போது?

தமிழகத்தில், 2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது அயல்மொழிகளில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க வேண்டும்.இதனால், மாண
வர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, தங்கள் தாய்மொழித் தேர்வையும், விருப்ப மொழிப் பாடமாக எழுதலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தெலுங்கு, மலையாளம், உருது, இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச், கன்னடம், குஜராத்தி, அரபி என, ஒன்பது பாடங்களில் ஒன்றை, மாணவர்கள் எழுதலாம் என, இரு வாரங்களுக்கு முன் தேர்வுத்துறை அறிவித்தது.ஆனால், இந்த மொழி பாடத்துக்கான பொதுத் தேர்வு குறித்த, வினாக் கட்டமைப்பான, 'புளூபிரின்ட்' வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது; அதனால், எந்த முறையில் கேள்விகள் இடம் பெறும் எனத் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்