Skip to main content

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி29 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: சிங்கப்பூர் செயற்கைகோள் டெலியோஸ்-1 மற்றும் 5 துணை செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான “ஆன்ட்ரிக்ஸ்”  வணிக ரீதியாக இதுவரை 22 நாடுகளில் இருந்து 51 செயற்கைகோள்களை விண்வெளி ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. இந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த டெலியோஸ்-1 என்ற செயற்கைகோளை பூமியின் மேற்பரப்பு ஆய்வுக்காக இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் வெலாக்ஸ்-சி1, வெலாக்ஸ்-2 என்ற 2 மைக்ரோ செயற்கைகோள்கள் மற்றும் ஏதென்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, காலஸ்ஸியா என்ற 3 நானோ சாட் செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா