Skip to main content

பல்கலை, கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை.

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் 
பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவு
ம், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்;

 புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை. இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 'கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்