Skip to main content

தமிழை முதல்பாடமாக அறிவிப்பதில் கெடுபிடி வேண்டாம் : ஐகோர்ட் அறிவுரை

சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக அறிவிப்பதில் மாநில அரசு அதிக கெடுபிடிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு, தமிழ் கற்பிப்பு சட்டத்தின் கீழ் தீர்மானம் இயற்றியது. அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து (ஸ்டேட் போ
ர்டு மற்றும் மெட்ரிகுலேசன்) பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் கேந்திரியா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள், இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் மற்றும் புஷ்பா சத்யநாராயணா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழியை முதல்பாடமாக அறிவிப்பதில் அரசு கெடுபிடி மேற்கொள்ள வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் விருப்பதிற்கேற்ப முதல் மொழியை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா