Skip to main content

அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இ-சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திஅ
றிக்கை:


மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவைமையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், நகல் பெறுதல்ஆகிய சேவைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5, நகல் பெற ரூ.20 கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்த சேவை மூலம் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி