Skip to main content

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறு
வதற்கும், விவரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளிலும், ஆதார் எண்கள் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டது. பலமுறை ஆதார் எண் இல்லாத மாணவர்கள் பெயர் பட்டியல் மட்டுமே கேட்கப்பட்டதே தவிர, ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியத் தேவையாக இருப்பதால், கல்வித்துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை விடப்பட்டது.

சிறப்பு முகாம்கள்:இதன் அடிப்படையில், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்து; தற்போது, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் நடந்தது.
22 சிறப்பு குழுக்கள்:அதில் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே, ஒரு லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு தற்போது வரை ஆதார் எடுக்கப்படவில்லை. அதிலும், மெட்ரிக் பள்ளிகளில்தான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை. அதிக எண்ணிக்கையில் ஆதார் எண் இல்லாத பள்ளி மாணவர்களைக்கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டமும் முதன்மையாக உள்ளது.

ஆதார் அட்டை வழங்குவதற்கு, 22 சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பான்மையான குழுக்களை பள்ளிகளுக்கு பயன்படுத்தி, ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; இம்மாத இறுதிக்குள் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு அட்டை வழங்கப்படும்.
பள்ளி நிர்வாகத்தினரும் இந்நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்