Skip to main content

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன. 
பலபள்ளிகள், சென்னை முகவரியில் இருந்தாலும், அவை
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டக் கட்டுப்பாட்டில் வருகின்றன.உதாரணமாக, அம்பத்துார், சென்னையின் முக்கிய பகுதி. இது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. சென்னையில் விடுமுறை என, அறிவித்தாலும், திருவள்ளூர் கலெக்டர் அறிவிக்காவிட்டால், அம்பத்துார் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைப்பதில்லை .இதே அம்பத்துார், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் விடுமுறை அளித்தாலும், மாநகராட்சி அறிவிக்க மறுத்தால் விடுமுறை இல்லை. தென் சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பல பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் இருக்கின்றன; ஆனால், மாவட்டம் என, வரும்போது, காஞ்சிபுரம் கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு போய் விடுகின்றன. எனவே, இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதிலும், நிர்வாக குழப்பம் உள்ளது. இதேபோல், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன. சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலை இணைப்பில் உள்ளன. விடுமுறை விஷயத்தில், சில கல்லுாரிகள், கலெக்டர் அறிவிப்பையும், மற்ற கல்லுாரிகள் பல்கலை அறிவிப்பையும் பின்பற்றுகின்றன. அதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைகின்றனர்.


இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறும்போது, ''எல்லை பிரச்னைகள் தீர்க்கப்படாததால், மழைக்கால விடுமுறை அறிவிப்பு மட்டுமின்றி, வழக்கமான பணி நடைமுறையிலும் குளறுபடி ஏற்படுகிறது. இது பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை; மக்கள் தான் அவதிப்படுகின்றனர்,'' என்றார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்