Skip to main content

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடை
பெற்றன.


அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.இடைநிலைத் தேர்வில் அதிகமானோர் தோல்வியடைந்திருப்பது பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.எனவே, எந்தெந்தப் பாடங்களில் எந்தெந்தப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்துள்ளனர். அதில், வகுப்புகளுக்கு சரியாக வராதவர்களும், பாடங்கள் நடத்தப்படும்போது புரியாமல் இருந்தவர்களுமே அதிகம் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கற்பித்தல்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின்போது, தோல்வியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்கும் முறையும் விளக்கப்பட உள்ளது.


இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டும்என முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குள்ள பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா