பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான டிசம்பர் தேர்வுக்கு, 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.“பி.எட்., மற்றும் எம்.எட்., பாடங்களுக்கு,
டிசம்பரில் நடைபெற உள்ள துணைத்தேர்வை எழுத, 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ''தவறியவர்கள், நவம்பர், 5ம் தேதிக்குள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்,” என, ஆசிரியர் பல்கலை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி