Skip to main content

படிப்பை முடித்ததும் டி.சி., அண்ணா பல்கலை அதிரடி

'படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக மாற்றுச் சான்றிதழான, டி.சி.,யை வழங்க வேண்டும்' என, அனைத்து பொறியியல் கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியின் முன்னாள் மாணவர் மதுகுமார், 27. இவர், கல்லுாரி வளாகத்தில்,
6ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்ததில், மதுகுமார், 2013ம் ஆண்டிலேயே, எம்.சி.ஏ., படிப்பை முடித்த நிலையில், அவருக்கு மாற்றுச் சான்றிதழ் தர, கல்லுாரி நிர்வாகம் தாமதம் செய்ததே,தற்கொலைக்கு காரணம் என, தெரியவந்தது.

இதையடுத்து, மாணவன் இறப்பு குறித்து, விரிவான விளக்கம் அளிக்கும்படி, தனியார் கல்லுாரிக்கு, அண்ணா பல்கலைக் கழகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அத்துடன், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'மாணவர்கள் படிப்பை முடித்தவுடன், தாமதமின்றி மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும்; கல்வி, தேர்வு கட்டணம் நிலுவை போன்ற எந்த காரணத்துக்காகவும், சான்றிதழை நிறுத்தி வைக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.புகார் செய்யுங்க...சான்றிதழ் பிரச்னை குறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறும்போது, 'இப்பிரச்னை தொடர்பாக, மாணவர் மதுகுமார், எங்களை அணுகவே இல்லை; அணுகி இருந்தால், நாங்கள் விசாரித்திருப்போம். 'அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், இது போன்ற பிரச்னை ஏற்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம்' என்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்