Skip to main content

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:



தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏதேர்வுக்கு அக்., 12 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவ., 11. தேர்வு நாள் ஜன.,24. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில்லை.


தேர்வு முறை:


பொதுஅறிவு 75 வினாக்கள். இது பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். திறனறி தேர்வில் 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி தேர்வு எழுத வேண்டும்.கடந்த இரண்டாண்டுகளாக திறனறி தேர்வுகள் நடத்தப்படுவதால், முதல்முயற்சியில் தேர்வெழுதுபவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. எழுத்துத் தேர்வின்மூலமே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நேர்காணல் கிடையாது.எதிர்பார்ப்பில் வி.ஏ.ஓ., தேர்வு: அடுத்ததாக வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வுக்கான 800 காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 21 - 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுஅறிவு 75 வினாக்கள், கிராமநிர்வாக நடைமுறைகள் குறித்து 25 வினாக்கள், திறனறி தேர்வு 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்.


குரூப் 4 தேர்வு:


பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் 2500 காலிப்பணியிடங்கள் உள்ளன. குரூப் 4 தேர்விற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொது அறிவு 75 வினாக்கள், திறனறி தேர்வு 25வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் வீதம் 300மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வயது வரம்பில்லை.பொதுப்பிரிவினருக்கு இச்சலுகை கிடையாது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் திறனறி வினாக்கள் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு பாடத்தை படிக்க வேண்டும்.குரூப் 2ஏ தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொண்டால், தொடர்ந்து நடக்கும் குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கும் அது பயனுள்ளதாக அமையும், என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு