Skip to main content

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?


பாலிடெக்னிக்  கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்
. அதாவது தற்போது உள்ள நடைமுறைப் படி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (இயற்பியல்,வேதியியல், கணிதம் போன்ற) பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது முதுகலைப் படிப்பில் (M.A /M.Sc) 60% மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சிப்பெற்றிருந்த்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதனால் 60% க்கு குறைவான மதிப்பெண்கள் வைத்துள்ள  இலட்சக் கணக்கான முதுகலைபட்டதாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இதில் நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களும் 60% மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்  என TRB கூறி வருகிறது. மேலும் போட்டித்தேர்வு  வைத்து தான் தேர்வுச்செய்யப்படுகிறார்கள்  (அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு மட்டும்  போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்வதில்லை இது TRB யின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்திள்ளது). இதில் 60%க்கு குறைவான மதிப்பெண்கள்(10 வருடங்களுக்கு முன் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு) உடையவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்தால் திறமையான பேராசிரியர்களை அதிக அளவில் அடையாளம் காண முடியும். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் புதிய முறை அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்