Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் இன்று பொறுப்பேற்பு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி. எஸ்.சி.) 25-ஆவது தலைவராக கே.அருள்மொழி (58) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பொறுப்பேற்கக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் கூறின. 



 இந்த ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக சி.பாலசுப்பிரமணியன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், புதிய தலைவராக, பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
 இன்று பொறுப்பேற்பு?: ஆளுநர் கே.ரோசய்யாவின் உத்தரவின்படி, 62 வயது அல்லது 6 ஆண்டுகள் அதில் எது முதலில் வருகிறதோ அப்போது அருள்மொழி ஓய்வு பெறுவார். அதன்படி, பொறுப்பேற்ற நாளில் இருந்து 4 ஆண்டுகள் வரை பொறுப்பில் நீட்டிப்பார். புதன்கிழமை அவர் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 முனைவர் பட்டதாரி: 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அருள்மொழி பிறந்தார். தோட்டக்கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1985-இல் தமிழக ஐ.ஏ.எஸ். பிரிவில் இணைந்தார். செங்கல்பட்டில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். நகராட்சி நிர்வாகத் துறையில் துணை ஆணையராகவும், வேளாண்மைத் துறையில் இயக்குநராகவும் பணியாற்றினார்.
 2001-இல் நிதித் துறையில் சிறப்புச் செயலராகவும், 2002-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையில் முதல்வரின் சிறப்புச் செயலராகவும், பின்னர் பணியாளர்-பொது நிர்வாகம்-பயிற்சித் துறையின் செயலராகவும் பணியில் இருந்தார்.
 2007-இல் வணிக வரிகள் துறையின் செயலாளராகவும், பண்பாட்டுத் துறை ஆணையராகவும், மாநிலத் திட்ட ஆணையத்தின் உறுப்பினர்- செயலராகவும், பொருளாதாரம்-புள்ளியியல் துறை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
 முதல்வருடன் சந்திப்பு: இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் அருள்மொழி செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
 25-ஆவது தலைவர்; 11-ஆவது ஐ.ஏ.எஸ். அதிகாரி
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 1930-இல் உருவாக்கப்பட்டது. இதன் 25-ஆவது தலைவராக அருள்மொழி பொறுப்பேற்க உள்ளார். தலைவர் பதவியை வகிக்கும் 11-ஆவது ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர்.
 சுதந்திரத்துக்கு முன்பு வரை, 5 பேர் தலைவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு, தேர்வாணையத்தின் முதல் தலைவராக திவான் பகதூர் டி.என்.நாராயணசாமி பிள்ளை பொறுப்பேற்றார்.
 ஜே.சிவானந்தம், வி.பாலசுந்தரம், எம்.ஏ.செரீப், ஜே.ஏ.அம்பாசங்கர், டி.லட்சுமிநாராயணன், எஸ்.ஆர்.கருப்பண்ணன், டி.முருகராஜ், யாசின்அகமது, ஏ.எம்.காசிவிஸ்வநாதன், ஆர்.செல்லமுத்து உள்ளிட்டோர் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி