Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி


        இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 1
5 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்