Skip to main content

குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


      இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2ல் உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பட்டதாரிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதியுடைய பட்டதாரி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 11 ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் மேற்காணும் இணையதளங்களில் கல்வித் தகுதி, வயது வரம்பு, இதர தகுதிகளை அறிந்து, உடன் விண்ணப்பித்து வேலைக்கான போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தமிழக அரசில் வேலைவாய்ப்பை பெற முயற்சிக்கலாம். விண்ணப்பதாரர்கள், திருவள்ளூரில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்பட உள்ள இலவச முன்னோடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இந்த இலவச முன்னோடிப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள திருவள்ளூர் மாவட்ட மனுதாரர்கள் விண்ணப்பித்த சான்று நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்