Skip to main content

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

சென்னை:தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்டம்பரில் நடந்த தனித்
தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், http:/dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், நவ., 4 முதல், 6 வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' உரிய கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான், மறுகூட்டல் முடிவு வெளியாகும்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா