Skip to main content

தீபாவளி பண்டிக்கைக்கு 12 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை ஒட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தீபாவளி பண்டிகையை
யொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கோவை, ஈரோடு, கரூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவற்றில் முக்கிய ரயில்களில் பயணிகள் கூட்டத்தைப் பொருத்து தேவைக்கேற்ப கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது.
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை உத்தரவையும் மீறி பயணிகள் யாரேனும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2