Skip to main content

விமானப் படையில் அதிகாரி ஆக தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்களுக்கு வாய்ப்பு

விமானப் படையில் அதிகாரி ஆக விருப்பமா? ஆள் சேர்ப்பு முகாமுக்கு தயாராகுங்கள்! தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்களுக்கு வாய்ப்பு

உலகின் மிகப்பெரிய வான்படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. குரூப் X -  எஜுகேஷன் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் குரூப் Y -ஆட்டோமொபைல் டெக்னீஷியன், கிரவுண்ட்
டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் இண்டியன் ஏர்ஃபோர்ஸ் போலீஸ் டிரேடு பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் 20 முதல் 24ம் தேதி வரை தாம்பரத்திலுள்ள விமானப்படை நிலையத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி/காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் கலந்துகொள்ளலாம்.

பணி மற்றும் தகுதி விவரங்கள்

குரூப் X - எஜுகேஷன் இன்ஸ்ட்ரக்டர்

கல்வித்தகுதி: 

கலை/அறிவியல்/ வணிகவியல் பிரிவில் பட்டம் மற்றும் பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அவசியம். அல்லது பட்டப்
படிப்புடன் இரண்டு வருட கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கிலம்/கணிதம்/இயற்பியல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் முதுகலை அல்லது
எம்.சி.ஏ. படித்து பி.எட் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். பி.எட். படிக்காமல் 2 வருட கற்பித்தல் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

முகாம் நடைபெறும் தேதியில் உச்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு 20.9.2015 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும். 

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 21.9.15 அன்று உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

குரூப் Y - ஆட்டோமொபைல் டெக்னீஷியன், கிரவுண்ட் டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர் அண்டு இண்டியன் ஏர்ஃபோர்ஸ் போலிஸ்

கல்வித்தகுதி: 

50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்திலும் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது CBSE /மாநில கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட வொகேஷனல் கோர்ஸ் படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். வொகேஷனல் பிரிவில் ஆங்கிலப் பாடத்திலும் 50% மதிப்பெண்கள் அவசியம். ஆங்கிலப் பாடம் இல்லையென்றால் 10ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1.2.1996க்கும் 31.5.1999க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வு 22.9.2015 அன்று நடைபெறும். 

அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 23.9.2015 அன்று உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் முகாமில் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும். முகாம் காலை 7 மணிக்கு தொடங்கும். காலை 10 மணிக்குள் ஆஜராகிறவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு: 

குரூப்  X டிரேடுக்கான எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, சமகால நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் LANGUAGE COMPREHENSION, POWER OF EXPRESSION ஆகிய பகுதிகளிலிருந்து விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

குரூப் Y டிரேடுக்கான எழுத்துத் தேர்வில் +2 பாடத்திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் ரீசனிங், பொது விழிப்புணர்வு ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 

உடல்திறன் தேர்வில் 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். இது தவிர push ups, sit ups, squats தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.சம்பளம்:பயிற்சியின்போது மாதம் ரூ.11,400 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்தபின் குரூப் X டிரேடு பிரிவினருக்கு ரூ.25,780, குரூப் Y டிரேடு பிரிவினருக்கு ரூ.20,500 சம்பளமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: # 8, Airmen Selection Centre, 
Air Force Station, 
Tambaram, Chennai-600 046

Phone : 044-22396565, 09445299128

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்