Skip to main content

மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்

ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்
Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
   Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல்
கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டு அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.

      ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்ற ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால் இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்க முடியாத சூழல் நிலவுகிறது.சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தூர மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில் உடனடியாக பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய் பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

Grievance Category SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - ELE.EDN DIR

Reply அரசு விதிகளின்படி ஈராசிரியர் பள்ளிகளின் பதிலி ஆசிரியர் பணி ஏற்கும் வரை பணிவிடுப்பு செய்ய இயலாது என தெரிவிக்கலாகிறது. இவ்வலுவலக ந.க.எண்.185/அ6/2015 நாள்.11.09.2015

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்