Skip to main content

ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்

ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு இலவச லேப் டாப் நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால்அரசு சலுகை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் 67 மேல்நிலைப்பள்ளியில் படித்த 7000க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு மாநில அரசு இலவச லேப் டாப் வழங்குகிறது. பிளஸ் 2 முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வர வழைத்து லேப் டாப் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது லேப் டாப் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்க பள்ளிக்கல்விதுறை இயக்குநர், கலெக்டர் உத்தர விட்டனர். மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிராமப்புற பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தா ததால் ஏராளமான மாணவர்களால் ஆதார் அட்டை எடுக்க இயலாமல் போனது.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு லேப் டாப் கிடைக்கவில்லை. ஆதார் அட்டையை காரணம்காட்டி மாணவர்களின் சலுகைகளுக்கு தடை விதிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை. மாணவர்கள் தற்போது ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தாலும் வந்து சேர 2 மாதம் நீடிக்கும். அதுவரை லேப் டாப்பை பத்திரப் படுத்தி விடுபட்ட மாணவர்களுக்கு கொடுப்பார்களா? அல்லது திரும்ப அனுப்பி விடுவார்களா? என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர் களிடம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயரதிகாரிகளின் உத்தரவுபடி ஆதார் அட்டை இல்லாத மாணவர் களுக்கு வழங்கவில்லை. விடுபட்ட மாணவர்கள் பள்ளியிலோ, தாலுகா அலுவலகத்தில் ஆதார் எட்டை எடுத்து கொடுத்தால் லேப் டாப் வழங்கப்படும்' என்றார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்