பிரபல செயலியான வாட்ஸ்-அப்பை சுமார் 20 கோடி பேர் தமது மொபைல்களிலும், தனிநபர் கணினிகளிலும் அனுதின மெஸேஜ்கள் அனுப்ப பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இதன் மொபைல் செயலியில், மொபைல் நம்பரைக் கொண்டு ஹேக்கர்கள் சுலபமாக
அவர்களது போனுக்குள் வைரஸ்களை அனுப்பும் அபாய நிலை இருந்தது.
மொபைலுக்கு வந்த இந்த பிரச்சனையை சீராக்கிவிட்டனர். எனினும், கணினிகளில் ‘வெப்அப்’ மூலமாக இதனைப் பயன்படுத்தும், பயனாளர்களுக்கு ’பிசினஸ் கார்ட்’ போல அனுப்பப்படும் மெசேஜை திறந்தாலே அவர்களது கணினிக்குள் வைரஸை அனுப்ப முடியும் என ‘ஈஸாட்’ நிறுவனத்தின் பாதுகாப்பு நிபுணர் மார்க் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.ஆகவே, தெரியாத நம்பரிலிருந்து வரும், மெசேஜ்களை திறப்பது அந்த கம்யூட்டரையே சீரழிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஆகையால், வைரஸ்-எதிர்ப்பு மென்பொருளைமுன்கூட்டியே, இன்ஸ்டால் செய்வது மட்டுமே, ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்