Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு.

மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.


இத்தேர்வு எழுத, பி.எஸ்சி., நர்சிங் முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.இத்தேர்வுக்காக, 12 ஆயிரத்து, 192 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 43 பேரின் விண்ணப்பங்கள், 'உரிய கல்வித்தகுதி இல்லை' என, நிராகரிக்கப்பட்டன. அத்துடன், 'நர்சிங் கவுன்சிலில் குறிப்பிட்ட பிரிவில் பதியவில்லை' எனக்கூறி, பி.எஸ்சி., நர்சிங் படித்த, 914 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள், நர்சிங் கவுன்சில் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யை தொடர்பு கொண்டு, தங்கள் பதிவு சரியானது தான் என முறையிட்டனர்.

அறிமுகம்:இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் விளக்கம் தர, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டது. நர்சிங் கவுன்சில் அளித்த விளக்கத்தில், '914 பேரும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யும் போது, ஒரே வகைப்பதிவு மட்டுமே இருந்தது. சமீபத்தில் தான், மூன்று வகைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன' என, கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட, 914 பேரின் விண்ணப்பங்களையும், டி.என்.பி.எஸ்.சி., மீண்டும்
ஏற்றுக்கொண்டது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா