Skip to main content

800 கிலோ எடை கொண்ட கருவிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆஸ்ட்ரோசாட்!

விண்வெளியை ஆய்வு செய்வதற்கான "ஆஸ்ட்ரோசாட்' (ASTROSAT) செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக திங்கள்கிழமை ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி30 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் திங்கள்
கிழமை காலை 10 மணிக்கு ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 25 நிமிஷங்களில் ஆஸ்ட்ரோசாட் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட பாதைகளில் விடப்பட்டன. சந்திரயான்-1, மங்கள்யான் ஆகியவற்றை விட அதிக எடை கொண்டது ஆஸ்ட்ரோசாட்.



இந்த செயற்கைக்கோளில் அறிவியல் கருவிகளின் எடை மட்டுமே 800 கிலோ என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட் விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் ஸ்பைர் குளோபல் நிறுவனத்துக்காக லெமுர் எனப்படும் 4 சிறியவகைச் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.

இந்தச் செயற்கைக்கோள்கள் கப்பல்களைக் கண்காணிக்கவும், வானிலையைக் கண்காணிக்கவும் அனுப்பப்படும் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் ஆகும். அமெரிக்கா தவிர, இந்தோனேசியாவின் லெபான்-ஏ2 (76 கிலோ), கனடாவின் என்எல்எஸ்-14 (14 கிலோ) ஆகிய செயற்கைகோள்களும் அனுப்பப்படுகின்றன. இந்தச் செயற்கைக்கோள்கள் கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்க அனுப்பப்படுகின்றன. இந்தச் செயற்கைக்கோள்களோடு இதுவரை 21 நாடுகளைச் சேர்ந்த 51 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பியுள்ளது. 

ஆஸ்ட்ரோசாட்:  இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்வெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்கள், குறைந்த, அதிக திறன்வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக 5 கருவிகள் ஆஸ்ட்ரோசாட்டில் உள்ளன. இந்தக் கருவிகளின் மூலம் விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகளிலிருந்து (Black Hole) வரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்யலாம். அதன்மூலம், நட்சத்திரத்தின் மூலம் பற்றிய தகவல்கள், பால்வெளிக்கு அப்பாலுள்ள கோள்களில் நிகழும் உயர் ஆற்றல் நிகழ்வுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை அறியலாம்.

.


மங்கள்யானில் 25 கிலோ வரை அறிவியல் கருவிகள் இருந்தன. சந்திரயானில் 120 கிலோ வரை அறிவியல் கருவிகள் இருந்தன. ஆனால், ஆஸ்ட்ரோசாட்டில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 800 கிலோ இருக்கும். ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 1,513 கிலோ எடை கொண்டது. இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 கருவிகள்: புற ஊதாக் கதிர்களை ஆராயும் "அல்ட்ராவொயலட் இமேஜிங் டெலஸ்கோப்' (யு.வி.ஐ.டி.), எக்ஸ்ரே கதிர்களின் மூல வேறுபாடுகளை அறிய உதவும் "லார்ஜ் ஏரியா எக்ஸ்ரே புரபோர்ஷனல் கவுன்ட்டர்' (எல்.ஏ.எக்ஸ்.பி.சி), வெகுதொலைவில் உள்ள எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்கான "சாப்ட் எக்ஸ்ரே டெலஸ்கோப்' (எஸ்.எக்ஸ்.டி.), அதிக திறன் வாய்ந்த எக்ஸ்ரே, காமா கதிர்களைக் கண்டறிய உதவும் "கேட்மியம் ஸிங்க் டெல்லுரைட் இமேஜர்' (சி.இசட்.டி.ஐ.), விண்வெளியை எக்ஸ்ரே கதிர்களுக்காக ஸ்கேன் செய்ய உதவும் "ஸ்கேன்னிங் ஸ்கை மானிட்டர்' (எஸ்.எஸ்.எம்.) ஆகிய 5 கருவிகள் இதில் உள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா