Skip to main content

தமிழ்நாட்டில் மொழிப்பாடங்களுக்கு 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை ஆய்வில் தகவல்

தமிழநாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3-ல் ஒரு பங்கு  பள்ளிகளில் 10ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.  இதனால் மாணவர்களின் ஒட்டு மொத்த செயல்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பின் தங்கிய பகுதிகளில் இந்த நிலைமை உள்ளது. நாடுமுழுவதும் ஒட்டு மொத்தமாக இந்த
போக்கு உள்ளது. நாடு முழுவதும் 40 சதவீத அளவில் குறைந்தது ஒரு பாடத்திட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

தேசிய சாதனையாளர் சர்வே  அமைப்பு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியானுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 35.85 சதவீத அரசு பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அண்மையில் உள்ள கேரளாவில்  இது 11.23 சதவீதமாகவும் தெலுங்கானாவில் 29.45 சதவீதமாகவும்,ஆந்திர பிரதேசத்தில் 23.32 சதவீதமாகவும், கர்நாடகாவில் 20.87 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ் நாட்டின் மற்ற பாடங்களுக்கு நன்றாக ஆசிரியர்கள் உள்ளனர்.  இது கணக்கில் 9.92 சதவீதமும், அறிவியலுக்கு 13.42 சதவீதமும், சமூக அறிவியலுக்கு 23.72 சதவீதமும் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் இது இந்திய தேசிய சராசரி 37.89,33.17 ,41.62 விட குறைவாகத்தான் உள்ளது.ஆய்வு கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைவு என்பது  குழந்தைகளின்  மிக மோசமான செயல் திறனுக்கு வழிவகுக்கிறது என சுட்டி காட்டி உள்ளது.

இந்த பிரச்சினை தீவிரமாகவும், தீர்க்கபட வேண்டும் திறம்பட கண்காணிக்கும் வரை இந்த தரத்தை பற்றிய கவலை அர்த்தமற்றது.

கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள்  வாடிக்கையாக தொடர்ந்து  மொழிப்பாடம் எடுத்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆசிரியர்கள் மொழி நுணுக்கங்களை விளக்க முடியாது குறிப்பாக இலக்கணம்.  மொழி அடிப்படை தவறாக கற்பிக்கபட்டால்  மாணவர்கள் போட்டி தேர்வுகளின் போது நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். என அரசு ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறும் போது வகுப்பு ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் உள்பட 2 அல்லது அதற்கும் மேற்பட்ட பாடங்களை எடுக்கின்றனர். அவர்களுக்கு, "இந்த பாடங்களில் போதுமான பயிற்சி இல்லை என்றால் அவர்களால் ஒழுங்காக பாடங்களையும் கற்பிக்க முடியாது என கூறினர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்