Skip to main content

நம் இணைய இணைப்பை தனக்குப் பயன்படுத்தும் விண்டோஸ் 10

உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட் “விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண் 10 குறித்த கேள்வி பதில் (http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq) பகுதியில் தெரிவித்துள்ளது.

இந்த விண்டோஸ் ஆப்டிமைசேஷன் டூல், (WUDO) விண்டோஸ் அப்டேட் பைல்களையும், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பெற செயல்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில், மிக மெதுவாக இயங்கும் இணைய இணைப்பு அல்லது, தொடர்ந்து செயல்படுமா என்ற சந்தேகத்தினைத் தரக் கூடிய இணைய இணைப்பு இருந்தால், இந்த டூல், உங்களுக்கு அப்டேட் பைல்களைப் பெற உதவும். ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை நீங்கள் வைத்து இயக்கிக் கொண்டிருந்தால், இந்த அப்டேட் பைல்களைப் பெற்று, கம்ப்யூட்டர்களை திறன் உயர்த்த, நீங்கள் பயன்படுத்த வேண்டிய இணைய அலைக்கற்றை வரிசைப் பயன்பாட்டினை இது குறைத்திடும். இது நல்லதுதானே என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள்.

இந்த டூல், உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, அது இயங்கும் இணைய லோக்கல் நெட்வொர்க்கில் உள்ள மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கும் அப்டேட் பைல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அனுப்பும். இதன் மூலம், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை, பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் சர்வராகப் பயன்படுத்துகிறது. இதில் கீழ்க்காணும் விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

1. இந்த Delivery Optimization டூல் விண்டோஸ் 10 இயக்க முறைமையில், தானாக மாறா நிலையில் இயக்கப்பட்டு கிடைக்கிறது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் பதியும்போது, எந்த நிலையிலும், “இந்த டூல் உங்களுக்குத் தேவைப்படுமா?” என்ற கேள்வி கேட்கப்படுவதில்லை. வரையறுக்கப்பட்ட அலைக்கற்றை வரிசை வழி இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த டூல் உதவிடும் என்ற நிலையிலேயே இதனை மாறா நிலையில் மைக்ரோசாப்ட் வைத்துள்ளது.

2. இந்த WUDO டூல், ஏற்கனவே விண்டோஸ் அப்டேட் செயல்பாட்டுக்குப் பதிலாக வழங்கப்படுவதில்லை. அந்த அப்டேட் செயல்முறையும் செயல்படுகிறது. அதனை இன்னும் செறிவாகப் பயன்படுத்த WUDO டூல் பயன்படுத்தப்படுகிறது.

3. WUDO டூல், விண்டோஸ் அப்டேட் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் செயலிகள் என்ன பாதுகாப்பு வழிகளைப் பயன்படுத்துகின்றனவோ, அதே வழிகளையே பயன்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த டூல், நம் கம்ப்யூட்டரில் உள்ள தனிப்பட்ட பைல்கள் அல்லது போல்டர்களை அணுக முடியாது. அவற்றை மாற்றவும் இயலாது. ஆனால், இந்த டூலைப் பொறுத்தவரை, மூன்று விருப்பங்கள் நாம் தேர்ந்தெடுக்க வழங்கப்படுகின்றன. 1) உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து, உங்கள் லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள பெர்சனல் கம்ப்யூட்டர்களிடமிருந்து அப்டேட் பைல்களைப் பெறலாம் அல்லது அனுப்பலாம். 2) அதே போல இணைய இணைப்பில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், மற்றும் 3) இந்த டூல் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல்.

விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 எஜுகேஷன் பதிப்புகளில், 

உங்களுடைய லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள பெர்சனல் கம்ப்யூட்டர்களுடன் மட்டும் அப்டேட் பைல்களைப் பகிர்ந்து கொள்வது மாறா நிலையில் தரப்பட்டுள்ளது. மற்ற பதிப்புகளில், இணையத்தில் இணைந்துள்ள மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் பகிர்ந்து கொள்வது மாறா நிலையில் உள்ளது.

இதில் இன்னொரு சலுகையும் உள்ளது. இணைய இணைப்பு metered என அதன் தகவல் பரிமாற்றம் கணக்கிடப்படுவதாக இருப்பின், இந்த WUDO டூல், அந்த இணையத் தொடர்பினைப் பயன்படுத்தாது. உங்கள் இணைய இணைப்பினை, நீங்கள் Metered ஆகக் குறித்து வைக்கலாம். இதற்கு, Start > Settings > Network & Internet > Wi Fi > Advanced options என்று சென்று, Set as metered connection என்பதனை அடுத்துத் தரப்பட்டுள்ள ஸ்விட்சை இயக்கி வைக்க வேண்டும். 

மொத்தமாக WUDO டூலினை இயங்காமல் செய்திடலாம். Start > Settings > Updates & security > Windows Update > Advanced options என்று சென்று, Choose how updates are delivered என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பின்னர் Delivery Optimization என்பதனை இயங்கா (Off) நிலையில் அமைக்க வேண்டும். இந்த இரண்டு (Set as metered connection மற்றும் Off) செயல்பாடுகள் தவிர, இந்த டூலின் செயல்பாட்டினை நிறுத்த வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த டூல் செயல்பாட்டில், ஹேக்கர்கள் எனப்படும் வைரஸ் மற்றும் மால்வேர் பரப்புபவர்கள் வரும் வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் சிஸ்டம் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் கிரகாம் குழுலெ (Graham Cluley) ஏற்கனவே, விண்டோஸ் அப்டேட் டூல்களைப் பயன்படுத்தித்தான் ஏற்கனவே ஹேக்கர்கள் பிளேம் மால்வேர் (Flame malware) ஒன்றைப் பரப்பியதாக நினைவு படுத்தியுள்ளார். அவர்கள், இந்த WUDO டூலினைப் பயன்படுத்தி மீண்டும் மால்வேர் புரோகிராம்களைப் பரப்ப முயற்சிப்பார்கள் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எந்த யோசனையும் இல்லாமல், இந்த டூலை இயங்காமல் நிறுத்தி வைப்பதுதான் நல்லது என நினைக்கிறீர்களா! நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்