Skip to main content

மிகப்பெரும் விண்கல் பூமியின் மேல் மோதுகிறதா?

மிகப்பெரும் விண்கல் பூமியின் மேல் மோதுகிறதா?: இணையத்தில் வேகமாக பரவும் வதந்திக்கு நாசா பதில்.
         அடுத்த மாதம் செப்டம்பர் 15 - 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த
சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வருகிறது.

              குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாசா கூறுகையில், ”இந்த தகவலில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இணயங்களில் கூறப்பட்டுள்ள தேதிகளில் விண்கல்லோ அல்லது வேறு ஏதேனும் வானியல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளும் பூமி மீது விழுவதற்கான ஒரு சிறிய அளவிலான ஆதாரங்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி