Skip to main content

அரசு பள்ளிகளில் ஏற்படுத்த முன் வரலாமே சுகாதாரக்குழு

அரசு பள்ளிகளில் ஏற்படுத்த முன் வரலாமே சுகாதாரக்குழு! : மாணவர்களின் தனி மனித ஒழுக்கம் மேம்பட வாய்ப்பு
குழந்தைகளிடம் சுகாதார விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், பள்ளிகளில் சுகாதார
க்குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகர பகுதியில் நிலவும் மோசமான சுகாதாரக்கேடு காரணமாக சிறியவர்கள், முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஆறு முதல், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர், நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிள்ளைகளின் சுகாதாரமான பழக்கவழக்கங்கள் குறித்து, பெற்றோர்கள் பலரும் போதிய அக்கறை காட்டுவதில்லை. தொழிலாளர்களாக உள்ள பலரும், குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பை கூட மற்றவர்களிடம் தந்துவிட்டு செல்லும் நிலையே, திருப்பூரில் நிலவுகிறது.

இதனால், பள்ளிகளில் குழந்தைகளுக்கு நற்பண்புகள், சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து கற்பித்தலும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், "சிலபஸ்' முடிப்பதில் மட்டுமே ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்களின் உடல் நலம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

அரசு பள்ளிகளில் படிக்கும் பல குழந்தைகள், அதிகளவில் தலைமுடி வளர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். தலைக்கு, சரிவர எண்ணெய் தேய்ப்பதில்லை. சில குழந்தைகள், குளிக்காமல் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். இன்னும் சிலர், அழுக்கேறிய சீருடை அணிந்து காணப்படுகின்றனர். கைவிரல், கால் விரல் நகங்களை வெட்டும் பழக்கம், பல குழந்தைகளுக்கு சுத்தமாக இல்லை.நகங்களை பற்களால் கடிப்பது, விரல் சூப்புவது, மண்ணில் விளையாடி விட்டு கை கழுவாமல், சாப்பிடுவது, ரோட்டோரங்களில் விற்கும் ஈ மொய்த்த பலகாரங்களை வாங்கித் உண்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள், பல மாணவர்களிடம் காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், கல்வி கற்பிப்பதை போலவே, மாணவர்களின் சுகாதார பழக்க வழக்கங்களிலும், அப்பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்களின் சுகாதாரமான பழக்க வழக்கங்களில், ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே, கசப்பான உண்மை. சுகாதாரமற்ற பழக்கங்களால், நாளடைவில் மாணவ, மாணவியர் உடல் ரீதியாக பாதிப்படைகின்றனர். 

வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சிறிய வயதில் உண்டாகும் இந்த சுகாதாரமற்ற பழக்கம், பெரியவர்களாக வளர்ந்த பின்பும் தொடர்கிறது. இதற்கு தீர்வாக, பள்ளிகளில் சுகாதாரக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சுகாதாரமான பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம். சில பள்ளிகளில், மூத்த மாணவர்களை கொண்டு, சுகாதாரக்குழு ஏற்படுத்தப்பட்டு, மற்ற மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். ஆனால், பல பள்ளிகளில் சுகாதாரக்குழு உருவாக்கவில்லை; அது தவறு. சுகாதாரமான பழக்கங்களை பின்பற்றும் மாணவர்களுக்கு, பரிசு தந்து ஊக்குவிப்பதால், அது, மற்ற மாணவரின் தனி மனித ஒழுக்கம் மேம்பட மிகவும் உறுதுணையாக இருக்கும்,' என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்