Skip to main content

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவது போல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம்
வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கு முன், கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது பி.எட். படிப்புக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 47,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோல எம்.எட். உள்ளிட்ட பிற படிப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தாலும், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதாலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.பி.எட், எம்.எட், பி.பி.எட், எம்.பி.எட், டி.டி.எட். படிப்புகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்காக, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிடமிருந்து கல்விக் கட்டணப் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன. 
இந்தப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி தேதியாகும். இந்தப் பரிந்துரைகளுக்கான மாதிரிப் படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்