Skip to main content

உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்

'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப்
பல்கலை அறிவித்துள்ளது.

இப்பல்கலை, சென்னையில் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில், ஐந்து இசை கல்லுாரிகள், மூன்று கவின்கலைக் கல்லுாரிகள் மற்றும், 17 இசை பள்ளிகள் உள்ளன. தற்போது முதல் முறையாக, பல்கலைக்கு வெளியே படிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் வீணை காயத்ரி அளித்த பேட்டி:இசை மற்றும் கவின்கலைப் படிப்புகள், சென்னை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமே நடத்தப்படுவதால், கிராம மக்கள் படிக்க முடியவில்லை. எனவே, பல்கலையின் பாடத்திட்டப்படி, தமிழகம் முழுவதும், தனியார் மற்றும் அரசு கல்வி அமைப்புகளின் ஒத்துழைப்புடன், 250 கல்வி மையங்கள், பல்கலைக்கு வெளியே அமைக்கப்படும். இதில், ஓராண்டு கால டிப்ளமோ மற்றும் ஆறு மாத கால சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.

டிப்ளமோ படிக்க, 8ம் வகுப்பு சான்றிதழ் படிப்புக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 
இந்த படிப்புக்கு, பல்கலையின் நேரடி சான்றிதழ் வழங்கப்படும். அக்டோபர் முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்.வெளி வளாக படிப்பு மையங்களை நடத்த, தனியார் கல்வி அமைப்புகள், அறக்கட்டளைகள், இசை சபாக்கள், இசை குழுமங்கள் எங்களை அணுகலாம். அந்தந்தப் பகுதிகளில், எந்தவித பாடப்பிரிவு தேவைப்படுகிறதோ, அதற்கேற்ற பிரிவுகளை மட்டும் கல்வி மையங்களில் தேர்வு செய்யலாம். சம்பந்தப்பட்ட அமைப்புகளே, ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இல்லை யெனில் பல்கலை சார்பில் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.

இசை, கலைப் படிப்பு மையங்களை துவங்க ஆர்வமுள்ளவர்கள், பல்கலைப் பதிவாளர் அல்லது அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை பெற, offcampus.tnmfau@gmail.com என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம். கூடுதல் விவரங்களை, www.tnmfau.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

என்னென்ன படிப்புகள்
வாத்திய இசை, வீணை, பரதம், மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடனம், ஓவியம், கைவினை கலை, பேஷன் டிசைனிங், முடி அலங்காரம், புகைப்படக்கலை, திரை ஒளிப்பதிவு பயிற்சி, அரங்க வடிவமைப்பு, நகை தயாரிப்பு, மருதாணியிடுதல் மற்றும் டாட்டூ வரைதல் மற்றும் குரல்வளக் கலை உள்ளிட்ட படிப்புகள், இந்த மையங்களில் கற்றுத் தரப்படும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு