வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்
பொதுத் துறை வங்கிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் வங்கி உயரதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு பெற உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பணியாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு காலியிடங்களை நிரப்புவது தொடர்பான விதிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் விருப்பம் கொண்டிருப்பதாகவும் ஆனால் இதற்குசட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.இதற்கு தீர்வு காண்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் 22 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 5துணை வங்கிகளும் உள்ளன.