Skip to main content

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக.17-இல் மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை ஆகஸ்ட் 17 முதல் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள்
இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வை 68,941 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த 424 பேருக்கான முடிவுகள் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 11 மணிக்கு இந்த முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் 75 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் மதிப்பெண்ணில் மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ளவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி