Skip to main content

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை: 17-ம் தேதி முதல் அமல்

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் புதிய முறை வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால
முருகன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் டுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக் கம் போல் ‘ஆன் லைன்’ மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெற்று விட்டு பின்னர் வளசரவாக்கம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்று வந்தனர்.


ஆனால், ‘தட்கல்’ முறையில் விண் ணப்பிப்பவர்களின் ஆவணங் களை மிகவும் கவனமாகபரிசீலிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக் கான நேர்காணல் சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இனி நடைபெறும்.இப்புதிய நடைமுறை வரும் 17-ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி