பள்ளி மாணவர்கள் இணைந்து எளிமையான தூசி பறக்காத கரும்பலகை துடைப்பானை உருவாக்கியுள்ளனர். வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் அறிவியல் ஆசிரியர் திரு. இராமமூர்த்தியுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.இதனை உருவாக்கும் எளிய செயல்முறை இதோ!பழைய சணல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிறிய செவ்வக வடிவமாக ஒரு துண்டு நறுக்கிக் கொள்ளுங்கள்.அதனை சோப்புப் பெட்டி அல்லது வேறு ஏதேனும் பெட்டியின் வாய்ப்பக்கத்தில் நன்றாக தொய்வல் இல்லாமல் ஒட்டிக் கொள்ளுங்கள்.அவ்வளவு தான் . Dust Free Duster தயாராகிவிட்டது. இதனை வைத்து கரும்பலகையை அழிக்கும் போது பெரும்பாலான துகள்கள் சணல் சாக்கின் சிறிய துளைகள் வழியாக உள்ளே சென்று சோப்புப் பெட்டிக்குள் சேகரமாகின்றன. இந்த சுண்ணாம்புத் துகள்களை பின்னர் எளிதாக சோப்புப் பெட்டியினைத் திறந்து சேகரித்துக் கொள்ளலாம். செய்து பார்த்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி