Skip to main content

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இராணுவத்தில் இலவச பொறியியல் படிப்புடன் பணி

இந்திய இராணுவத்தில் 10+2 Technical Entry Scheme திட்டத்தின் 34-வது கோர்ஸ்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் பொறியியல் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து வி
ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோர்ஸ் 2016 ஜனவரி மாதம் ஆரம்பமாகும்.

பணிப்பிரிவு: 10+2 Technical Entry Scheme-Course-34

காலியிடங்கள்: 90

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16 1/2 -லிருந்து 19 1/2-க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1996-க்கு முன்பு அல்லது 01.07.1999-க்கு பின்பு பிறந்தவர்களாக இருக்கக் கூடாது (இரு தேதிகள் உள்பட)

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட தேர்வுகள், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு 2015 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.

பயிற்சி காலம்: ஐந்து ஆண்டுகள். ஒரு வருடம் அடிப்படை ராணுவ பயிற்சி கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படும். அதன் பின்னர் 4 வருடங்கள் பூனா, மோவ், செகந்திராபாத் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுடப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின்போது மாதம் ரூ.21,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்தபின் லெப்டினன்ட் அந்தஸ்தில் பணி நியமனம் வழங்கப்படும். இது நிரந்தர பணியாகும். அதாவது பணி ஒய்வு வயதுவரை ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

5 வருட பயிற்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiansrmy.nic.in என்ற இணையதளத்தில் Online application பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் மதிப்பெண்களை துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதாவது 79.9 என்பதை அப்படியே குறிப்பிட வேண்டும். மாறாக 80 என குறிப்பிடக் கூடாது.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, கெஜட்டெட் அதிகாரியிடம் அட்டெஸ்ட் பெற்று, இத்துடன் வயதை நிரூபிப்பதற்கான பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று தங்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் படிவத்துடன் அட்டெஸ்ட் நகல்களை தேர்வின்போது சம்ரப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை 10.06.2015 முதல் 10.07.2015 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு