Skip to main content

போலி அகவிலைப் படி உயர்வு அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 30-ஆம் தேதி நிதி
த் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட அறிவிப்பு போலியானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பது வழக்கம். இந்த அறிவிப்பு வெளியானவுடனேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படியானது 107 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது.
திடீர் அறிவிப்பு-குழப்பம்: கடந்த 2014-15-ஆம் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறையில் இருந்து அதன் சார்புச் செயலாளர் ஏ.பட்டாச்சார்யா கையெழுத்திட்ட ஒரு அலுவலகக் குறிப்பாணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தக் குறிப்பாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்படுவதாகவும், இதன் மூலம், அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 115 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடம் பெரும் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போது, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதனால், தமிழக அரசு ஊழியர்களும் மாநில அரசின் அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

அறிவிப்பே போலி: இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு போலியானது என மத்திய அரசின் நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, நிதியமைச்சகத்தின் செலவினப் பிரிவு இயக்குநர் சுபாஷ் சந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், "கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு போலியானது. அதுபோன்ற எந்த அறிவிப்பும் நிதித் துறையின் செலவினப் பிரிவில் இருந்து வெளியிடப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பை கருத்தில் கொள்ள வேண்டாம்' என்று மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மத்திய அரசு அலுவலகங்களை கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ஆம் தேதிக்காகவா? ஏப்ரல் 1-ஆம் தேதியை முட்டாள்கள் தினம் எனக் கூறுவதுண்டு. அதுபோன்று கடந்த 30-ஆம் தேதியன்று, அகவிலைப்படி உயர்வு குறித்து போலியான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கலாம் என மத்திய அரசுத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மத்திய அரசுத் துறையிலேயே இதுபோன்ற போலியான அறிவிப்பு வெளியாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

விசாரணைக்கு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பான ஆணை தில்லி உள்ளிட்ட மாநகரங்களில் பணிபுரியம் மத்திய அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட போலி ஆணையை வெளியிட்டு விஷமத்தனத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தில்லி காவல் துறை விசாரணை நடத்தும்படி மத்திய நிதித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்