Skip to main content

குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


சென்னை மாவட்ட இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.செ
ன்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்ட அறிக்கை:       2006ம் ஆண்டின் இளைஞர்  நீதி(குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்  குழுமத்திற்கான சமூகப் பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்த சமூக  பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட  உள்ளனர்.விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.


குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம்  (அ) மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில்  குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாகவும், வயது 35 முதல் 65க்குள்ளும் இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த  நபர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை (http;/www.tn.gov.in/departments/30) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, வரும் 24ம் தேதிக்குள்  ஆணையர், சமூகப்பாதுகாப்பு துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை, 600-010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்