அமெரிக்காவில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த மும்பை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச வானூர்தி வடிவமைப்புப் (Aeronautical design) போட்டியில் ஆசிய கண்டத்தில் மு
தலிடம் பிடித்து மும்பை என்ஜினீயரிங் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
புளோரிடாவில் உள்ள லேக் லேண்ட் பகுதியில் கடந்த மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த இந்த சர்வதேசப் போட்டியில் மும்பையின் அஞ்சுமான்-இல்-இஸ்லாம் எம்.எச்.சாபூ சித்திக் என்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து வந்த 75 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் சாபூ சித்திக் கல்லூரியின் ‘ஏரோசோல்ஸ்’ மாணவர்கள் குழு, சர்வதேச வானூர்தி வடிவமைப்பு போட்டியில் ஆசிய கண்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.
இது மட்டுமின்றி ‘அட்வான்ஸ்டு கிளாஸ்’ பிரிவில் இரண்டாம் இடத்தையும், ‘மைக்ரோ கிளாஸ்’ பிரிவில் மூன்றாம் இடத்தையும் இந்த குழு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிக்குக் காரணமான மாணவர்களை நினைத்து பெருமைப்படுவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.