Skip to main content

பணி விருப்பத்தை பதிவு செய்ய வாய்ப்பு


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள்
, நேற்று முன்தினம் வெளியாயின. இதில், வெற்றி பெற்றுள்ள தேர்வர்களுக்கு, விரைவில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இந்நிலையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் துறை குறித்த விவரங்களை, ஆன் - லைனில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றோர் விவரங்கள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் துறை குறித்த விவரங்களை, இணையத்தில் மீண்டும் புதிதாக பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு விரைவில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் தேர்வர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி