Skip to main content

மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும்

மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும்; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூ
டங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான சூழ்நிலை

அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உரிமை உள்ளது. அவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண், பெண் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஈவ்டீசிங், பாலியல் கொடுமை ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இந்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும்.


குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக்கூட நிர்வாகிகளும், அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கூட ஊழியர்களும் அறியவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் உருவாக்கவேண்டும்.

வளர் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கவேண்டும்.

மாணவிகளுக்கு கராத்தே

மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும். மேலும் ஆண்-பெண் சமம் என்பது குறித்த கண்காட்சி, வினா-விடை போட்டியை பள்ளிகளில் நடத்தவேண்டும். விடுதிகளில் மன
ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய சவால்களை சந்திக்கும் திறனை உருவாக்கவேண்டும்.

மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்டவாறு பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டியில் பள்ளியின் முதல்வர் அல்லது துணை முதல்வர், ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர், ஒரு மாணவி, ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர் ஆகியோர் இடம் பெறவேண்டும். அந்த கமிட்டியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புகார் பெட்டி- சி.சி.டி.வி. கேமரா

மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புகார் செய்ய, புகார் பெட்டி இருக்கவேண்டும். அந்த பெட்டியில் பாலியல் கொடுமை பற்றி மாணவ-மாணவிகள் ஏதாவது எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட வளாகங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்கவேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பது, மன அழுத்ததில் இருந்தால் அவர்களுக்கு முறையான உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வகுப்பறைகளிலும், விடுதிகளிலும், விளையாடும் இடங்களிலும் இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கானஹெல்ப் லைன்

குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் போன் நம்பர் நோட்டீசு போர்டு உள்பட முக்கிய இடங்களில் எழுதி போடவேண்டும். குறிப்பாக 1098 என்ற நம்பர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தெரியவேண்டும். பள்ளிக்கூட நிர்வாகம், ஊழியர்கள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா