Skip to main content

ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்

'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை தெரிவிக்கலாம்' என,
அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதியர்கள் மார்ச் முதல், பிப்ரவரி மாதம் முடிய, ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியம் மீது கணக்கிடப்படும் வருமான வரியை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலுவலரால், ஓய்வூதியரின் மாதாந்திர ஓய்வூதியத்தில், பிடித்தம் செய்யப்படுகிறது. தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் தெரிவித்தால், அவர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள் மற்றும் பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை, ஆண்டு துவக்கத்திலே தெரிவிப்பதற்கு வசதியாக, கருவூல கணக்குத் துறை, ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது. இப்படிவத்தை, www.tn.gov.in/karvoolam என்ற இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வருமான வரி பிடித்தத்திற்கு உட்படும் ஓய்வூதியர்கள், தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், கழித்தலுக்கு தகுதியான விவரங்களை, ஜனவரி மாதத்திற்குள், கொடுக்க தவறி இருந்தால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், தங்களிடம் உள்ள, ஆவணங்கள் அடிப்படையில், வரி பிடித்தம் செய்ய நேரிடும்.கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால், திருப்பி வழங்க இயலாது.வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும்போது, வருமான வரித்துறையிடம் இருந்து மட்டும் மிகையாக செலுத்தப்பட்ட வருமான வரியை, மீண்டும் பெற இயலும். இதற்கான படிவம், கருவூல அலுவலரால் கையொப்பமிடப்பட்டு, மே, 31ம் தேதிக்குள் வழங்கப்படும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்